சொதப்பிய ரோகித்... ஆனாலும்  அதிரடி காட்டிய மும்பை பேட்ஸ்மேன்கள்...!

சொதப்பிய ரோகித்... ஆனாலும் அதிரடி காட்டிய மும்பை பேட்ஸ்மேன்கள்...!

சொதப்பிய ரோகித்... ஆனாலும் அதிரடி காட்டிய மும்பை பேட்ஸ்மேன்கள்...!
Published on

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 208 ரன்களை குவித்துள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பையின் கேப்டன் ரோகித் ஷர்மா.

இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது மும்பை.

மும்பை அணிக்காக பேட்ஸ்மேன்கள் டிகாக் (67 ரன்கள்), கிஷன் (31 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (28 ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் ஷர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை. 

இதனையடுத்து ஹைதரபாத் 208 ரன்களை சேஸ் செய்ய களம் காண உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com