அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.
இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்ற முனைப்போடு விளையாடுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்கிறது.
11 ஆட்டங்களில் 7 வெற்றிகளை இரு அணிகளும் பதிவு செய்து 14 புள்ளிகளை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பையின் ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை.

