\
MI VS RCB : தேவ்தத் படிக்கல் அசத்தல் - மும்பைக்கு 165 ரன்கள் இலக்கு 

MI VS RCB : தேவ்தத் படிக்கல் அசத்தல் - மும்பைக்கு 165 ரன்கள் இலக்கு 

MI VS RCB : தேவ்தத் படிக்கல் அசத்தல் - மும்பைக்கு 165 ரன்கள் இலக்கு 
Published on

அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன. 

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

நடப்பு சீசனில் 11 ஆட்டங்கள் விளையாடி 236 ரன்களை சேர்த்துள்ள ஆரோன் ஃபின்ச்சுக்கு மாற்றாக ஜோஷ் பிலீப் அணியில் சேர்க்கப்பட்டார். 

இளம் வீரர் தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலீப்பும் பெங்களூருவுக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 71 ரன்களை சேர்த்தனர். 

ஜோஷ் பிலிப் 33 ரன்களை எடுத்து அவுட்டானார். அவரை அடுத்து களம் இறங்கிய விராட் கோலி 9 ரன்களிலும், டிவில்லியர்ஸும் 15 ரன்களிலும், தூபே 2 ரன்களிலும் வெளியேறினர். 

எப்படியும் பெங்களூரு 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தனர் மும்பை பவுலர்கள்.

தேவ்தத் படிக்கல் 74 ரன்களில் பும்ராவின் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 

இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது பெங்களூரு. 

மும்பைக்காக பும்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தொடர்ந்து மும்பை அணி 165 ரன்களை சேஸ் செய்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com