ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை

ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை

ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை
Published on

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 37 ரன்களாக இருந்த போது லீவிஸ் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்தார். ஆண்ட்ரூடையின் 5 வது ஓவரின் மூன்றாவது பந்தில் இஷான் கிஷான் 20 ரன்களில் நடையைக் கட்டினார்.

 அதன் பின் வந்த கேப்டன் ரோகித் சர்மாவும் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 8.2 ஓவரில் 71 ரன்கள் எடுத்த நிலையில் முன்னணி வீரர்களை இழந்து மும்பை அணி தடுமாறியது. 

அச்சமயத்தில் கடந்த சில போட்டிகளில் விளையாடமல் இருந்த பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தது. அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் அன்கிட் ராஜ்புட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பின்னர், 187 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. ராகுல் ஒரு புறம் சிறப்பாக விளையாடினாலும் மற்ற வீரர்கள் தடுமாறியதால், இறுதியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 

ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com