வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகள் இன்று மோதல்

வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகள் இன்று மோதல்
வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்; சிஎஸ்கே தோற்றால் இனி நடைபெறும் அனைத்து ஆட்டங்களுமே வாழ்வா சாவா என்ற நிலைதான்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. நடப்பு தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, பங்கேற்ற 6 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும், சென்னை அணி தோற்றால் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா என்ற நிலை தான்.

சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்  ‘ஃ பார்மிற்கு’ திரும்பியிருப்பது கூடுதல் பலம். அவர் கடந்த போட்டியை போன்று இந்த ஆட்டத்திலும் கைகொடுப்பார் என நம்பலாம். உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலீ ஆகியோர் பழைய ஃபார்ம்க்கு வந்தால் மட்டுமே சிஎஸ்கே தப்பிக்க முடியும். அதிக ரன் எடுத்த சென்னை அணி வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிவம் துபே சீரான பேட்டிங்கை தர வேண்டும். தோனி, ஜடேஜா இருவரும் ‘ஃபினிஷராக அணிக்கு வெற்றி பெற்றுத் தருவர் என நம்பலாம். சென்னை அணிக்கு விக்கெட்டை வீழ்த்தும் வேகப்பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை. பவுலிங்கில் டுவைன் பிராவோ, தீக்சனா மட்டும் ஆறுதல் தருகின்றனர்.

மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோரின் ஃபார்ம் கவலை தருகிறது. இவர்கள் மீண்டால் அந்த அணியின் பாதி பிரச்சினை முடிந்துவிடும். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரெவிஸ், பொலார்ட் இணைந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். மும்பை அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியை காப்பாற்றவில்லை. மும்பை அணியில் ஒட்டுமொத்த வீரர்களும் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகள் இடையேயான இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்கலாம்: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய அதிரடி மன்னன் - பொல்லார்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com