\
தனி ஒருவனாக போராடிய சாம் கர்ரன் - மும்பை வெற்றி பெற 115 ரன்கள் தேவை

தனி ஒருவனாக போராடிய சாம் கர்ரன் - மும்பை வெற்றி பெற 115 ரன்கள் தேவை

தனி ஒருவனாக போராடிய சாம் கர்ரன் - மும்பை வெற்றி பெற 115 ரன்கள் தேவை
Published on

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 30 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறியது. 

கெய்க்வாட், டுப்லெஸி, ஜெகதீசன், ராயுடு, ஜடேஜா, தோனி என சென்னையின் பேட்ஸ்மேன்கள் சொந்த அணிக்கே வில்லனாக மாறிப்போன நிலையில் சென்னையின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் டெயில் எண்டர்களோடு பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் போட்டு 47 பந்துகளில் 52 ரன்களை குவித்து சென்னை 114 ரன்களை எட்ட உதவினார். 

தனி ஒருவனாக களத்தில் மும்பை பவுலர்களோடு சண்ட செய்தார் சாம் கர்ரன்.

மும்பை அணி சார்பில் போல்ட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் தீபக் சஹார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோல்டர் நைல் தன்பங்கிற்கு ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இருபது ஓவர் முடிவில் சென்னை 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எட்டியது. 

மும்பை அணி 115 ரன்களை விரட்டி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com