ஐபிஎல் 2020 : கோப்பையை வெல்ல மும்பைக்கு 157 ரன்கள் தேவை! 

ஐபிஎல் 2020 : கோப்பையை வெல்ல மும்பைக்கு 157 ரன்கள் தேவை! 
ஐபிஎல் 2020 : கோப்பையை வெல்ல மும்பைக்கு 157 ரன்கள் தேவை! 

துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவானும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கடந்த ஆட்டத்தை போலவே இருவரும் பார்ட்னர்ஷிப்பில் பட்டையை கிளப்புவார்கள் என எதிர்பார்த்த நிலையில் போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார் ஸ்டாய்னிஸ்.

ஷார்ட் லென்த்தாக வீசப்பட்ட அந்த பந்து ஸ்டாய்னிஸின் பேட்டில் பட்டு எட்ஜாகி விக்கெட் கீப்பர் டி காக்கின் கைகளில் தஞ்சமடைந்தது. அதனால் ரஹானே கிரீஸுக்குள் வந்தார். ஆனால் அவரும் போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

சர்ப்ரைஸ் பிக்காக ராகுல் சஹாருக்கு மாற்றாக மும்பை அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ஜெயந்த் யாதவ் வீசிய அதற்கடுத்த ஓவரில் தவான் க்ளீன் போல்டானார்.  

பவர் பிளே ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்து தடுமாறியது டெல்லி. இந்த தொடரில் டெல்லி அணி பவர் பிளே ஓவர்களில் சொதப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்டும் பொறுப்பாக விளையாடினர். 

ஆட்டத்தின் மிடில் ஓவர்களான 7 முதல் 15 வரையிலான 54 பந்துகளை டீசண்டாக விளையாடி டெல்லி அணிக்கான ஸ்கோரை உயர்த்தினர்.

இருவரும் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அவர்களது விக்கெட்டை வீழ்த்தும் நோக்கில் குர்னால் பாண்ட்யா, பொல்லார்டு, பும்ரா, கோல்டர் நைல், ஜெயந்த் யாதவ் என பவுலர்களை சுழற்சி முறையில் மாற்றி பார்த்த மும்பையின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. 

தொடக்கத்தில் இன்னிங்க்ஸை நிதானமாக தொடங்கிய இருவரும் கிரீஸில் செட்டானதும் மும்பை பவுலர்களின் பந்துவீச்சை அசால்டாக விளையாடினர்.

பண்ட் 38 பந்துகளில் 56 ரன்களை குவித்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். மறுபக்கம் ஷ்ரேயஸ் கூலாக விளையாடி அரை சதம் கடந்தார்.

பெரிய ஷாட்களை ஹெட்மயர் ஆடி ஸ்கோர் போர்டில் ரன்களை ஹெட்மயர் அதிகரிப்பர் என எதிர்பார்த்திருக்க 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் ஷ்ரேயஸ்  50 பந்துகளில் 65 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். மும்பை அணிக்காக போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை குவித்தது டெல்லி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com