தென்ஆப்பிரிக்க டி20 லீக்: முக்கிய வீரர்களை வாரி சுருட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி!யார் யார்?

தென்ஆப்பிரிக்க டி20 லீக்: முக்கிய வீரர்களை வாரி சுருட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி!யார் யார்?
தென்ஆப்பிரிக்க டி20 லீக்: முக்கிய வீரர்களை வாரி சுருட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி!யார் யார்?

தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எம்ஐ கேப் டவுன் அணி, தங்களது முதல் ஐந்து வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நட்சத்திர வீரர்களான ரஷித் கான், ககிசோ ரபாடா, அதிரடிக்கு பெயர் போன லியாம் லிவிங்ஸ்டன், ஆல் ரவுண்டர் சாம் கரண், தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரீவீஸ் ஆகிய ஐந்து வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது அந்த அணி.

இவர்களில் டெவால்ட் ப்ரீவீஸ் இந்தாண்டு ஐபிஎல் சீசனின் மும்பை அணிக்காக விளையாடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், வரவிருக்கும் தென்னாப்பிரிக்க லீக்கிற்கான ஐந்து வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது.

ரிலையன்ஸ் ஜியோவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆகாஷ் அம்பானி, MI கேப் டவுனுடன் புதிய பயணத்தைத் தொடங்கியதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் ரஷீத் கான், ரபாடா, சாம் கரண் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோரை அணிக்கு வரவேற்றதுடன், தொடர்ந்து தங்கள் அணியில் பயணிக்க ப்ரீவிஸ் முடிவு செய்ததில் மகிழ்ச்சி என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com