\
Messi Sets Another Record with Goals in Seven Straight Matches
Lionel messi web

கால்பந்து FIFA 2026 | GOAT மெஸ்ஸி மேலும் ஒரு புதிய சாதனை!

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த அபூர்வ சாதனையால் மெஸ்ஸி புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளார்.
Published on

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அர்ஜென்டிவாவின் மெஸ்ஸி பெற்றுள்ளார். ஜோர்டானுக்கு எதிரான போட்டியில் அடித்த கோல் மூலம் மெஸ்ஸி இச்சாதனையை படைத்தார்.

Lionel Messis Football Journey
மெஸ்ஸிweb

இப்போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றிபெற்றிருந்தது. மெஸ்ஸி 2022 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த நிலையில் இம்முறை தொடர்ந்து 3 போட்டிகளில் கோல் அடித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

இதற்கு முன் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958) மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ (1970) ஆகியோர் தொடர்ந்து 6 போட்டிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. மெஸ்ஸி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

Messi Sets Another Record with Goals in Seven Straight Matches
’15 வயதில் கிரிக்கெட் உலகின் செல்லப்பிள்ளையான சூர்யவன்ஷி..’ கபில்தேவ் கொடுத்த எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com