பார்சிலோனா கிளப் அணியில் மெஸ்ஸி ஒப்பந்தம் நீட்டிப்பு
2021 ஆம் ஆண்டு வரை பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாட உள்ளார்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி கிளப்பான பார்சிலோனாவில் தனது 13 வயதில் இணைந்தார். அது முதல் அவர் அந்த கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக விளங்கும் மெஸ்சியின் நடப்பு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பார்சிலோனா கிளப் அணி மெஸ்சியின் ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்துள்ளது. அதாவது 2021–ம் ஆண்டு ஜூன் 30–ந் தேதி வரை பார்சிலோ கிளப் அணியில் தொடர மெஸ்சி ஒப்புக்கொண்டுள்ளார். மெஸ்சியின் ஒப்பந்த தொகை விவரம் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அவர் சுமார் ரூ.2,200 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அங்குள்ள பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.