`இன்னும் ஆட்டம் முடியல.. திரும்பி வருவாரு’ மெஸ்ஸிக்காக சண்டை செய்த குட்டி ஃபுட்பால் ரசிகை!

`இன்னும் ஆட்டம் முடியல.. திரும்பி வருவாரு’ மெஸ்ஸிக்காக சண்டை செய்த குட்டி ஃபுட்பால் ரசிகை!
`இன்னும் ஆட்டம் முடியல.. திரும்பி வருவாரு’ மெஸ்ஸிக்காக சண்டை செய்த குட்டி ஃபுட்பால் ரசிகை!

FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் முடிந்திருந்தாலும், இன்னும் அந்த ஃபுட்பால் ஃபீவரில் இருந்து ரசிகர்கள் மீளவில்லை என்பதை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வரும் போஸ்ட்கள் மூலமே தெரிந்துகொள்ள முடியும். அதுவும் கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி நடப்பு உலகக் கோப்பை சாம்பியனாக ஆனது அந்த அணியின், மெஸ்ஸியின் ரசிகர்களை உற்சாகக் களிப்பில் திளைக்கச் செய்திருக்கிறது.

இப்படி இருக்கையில், ஃபிஃபா உலகக்கோப்பையை மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிதான் வெல்லும் என அன்றே கணித்தார் என்ற பாணியில் கேரளாவைச் சேர்ந்த குட்டி சிறுமி ஒருவர் ஆவேசமாக சவால் விட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாக்களில் வட்டமடித்து வருகிறது.

அதன்படி, மலப்புரத்தில் உள்ள திரூர் மங்கலத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் லுப்னா பாத்திமா பேசிய வீடியோதான் பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதில், லீக் போட்டியின் போது அர்ஜென்டினா அணியை சவுதி அரேபிய அணி தோற்கடித்த போது சவுதி மட்டுமல்லாமல் பிரேசில், போர்ச்சுகல் அணியும் அர்ஜென்டினாவின் தோல்வியை கொண்டாடித் தீர்த்திருந்தார்கள்.

அந்த தோல்விக் கொண்டாட்டம் கேரளாவின் மலப்புரம் வரையிலும் எதிரொலித்தது. அதன்படி கேரளாவில் உள்ள பிரேசில் அணி ரசிகர்கள் சிலர் அர்ஜென்டினாவின் தோல்வியை சிலாகித்து கிண்டலடிக்க இதனைக் கண்ட மெஸ்ஸியின் குட்டி ரசிகையான அந்த சிறுமி, பிரேசில் ரசிகர்களிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்ததோடு போட்டி இன்னும் முடியவில்லை ஃபிஃபா கோப்பையை நிச்சயம் மெஸ்ஸி வெல்வார் என சவாலும் விட்டுச் சென்றார். அதன்படியே நடப்பு ஃபிஃபா உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி தற்போது முத்தமிட்டு சாதித்து காட்டியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com