மனச்சோர்வு உண்மைதான், வீரர்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ள வேண்டும் - ஸ்ரீகாந்த்

மனச்சோர்வு உண்மைதான், வீரர்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ள வேண்டும் - ஸ்ரீகாந்த்
மனச்சோர்வு உண்மைதான், வீரர்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ள வேண்டும் - ஸ்ரீகாந்த்
'பிசிசிஐ இப்போதே இந்தியா ஆடும் ஆட்டங்களின் கால அட்டவணையை எப்படி திட்டமிட வேண்டும் என்று யோசிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி என அடுத்தடுத்து இரண்டு படுதோல்விகளை அடைந்துள்ளது இந்திய அணி. கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறுவது இப்போது கடினமாகி உள்ளது.
நியூசிலாந்து அணி உடனான தோல்விக்குப்பின் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறுகையில், ''குடும்பத்தை பிரிந்து வாழ்கிறோம், 6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறோம். பயோ-பபுள் சூழலில் இருப்பதால் எங்களுக்கு மீண்டுவர ஓய்வு தேவை. நன்றாக விளையாட வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தாலும், களத்தில் இறங்கும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாது. ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் செய்யும்போது, பயோபபுள் சூழல், மனரீதியான அழுத்ததில் சிலநேரம் சிக்கிவிடுகிறோம்'' என்று கூறினார்.
இந்நிலையில் பும்ராவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிரிஸ் ஸ்ரீகாந்த், ''நான் வீரர்களை முழுமையாக ஆதரிக்கிறேன். மனச்சோர்வு என்பது முக்கியமான விஷயம். பிசிசிஐ இப்போதே இந்தியா ஆடும் ஆட்டங்களின் கால அட்டவணையை எப்படி திட்டமிட வேண்டும் என்று யோசிக்க வேண்டும். எல்லா வீரர்களையும் கவனித்துக்கொள்வது குறித்து பிசிசிஐ யோசிக்க வேண்டும். இதுதான் நாம் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம்'' என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com