சிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்!
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதின. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் மிக எளிதாக சென்னை வெற்றி பெற்றது. ஐபிஎல் என்றாலே கடைசி நொடி வரை பரபரப்பு நிலவும் ஆனால் நேற்றைய போட்டியில் அப்படி எதுவுமே இல்லை. டெஸ்ட் போட்டியை போல மிகவும் சாதாரணமாக நடந்து முடிந்தது.
ஐபிஎல் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை விடவும் ரசிகர்கள் இடையேயான போட்டி சமூக வலைதளங்களில் கடுமையாகவே உள்ளது. போட்டி நடந்துகொண்டு இருக்கும் போதே எதிரணியை கலாய்த்தும் தங்களது அணியை பாராட்டியும் மீம்ஸ்கள் பறக்கத்தொடங்கிவிடுகின்றன. மேட்ச் முடிந்ததும் சமூக வலைதளங்களுக்குச் சென்று மீம்ஸ்களை பார்த்து ரசிப்பதும் தற்போது பலருக்கு பொழுதுபோக்காக மாறி வருகிறது. அப்படி நேற்று நடந்த சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி குறித்த மீம்ஸ் கலென்ஷனை தொகுப்பாக பார்க்கலாம்.
நன்றி : TROLL CRICKET TAMIL VERSION