இது நரி தந்திரம்.. இது ராஜ தந்திரம்: அஸ்வினை சுற்றிய மீம்ஸ்!
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது அஸ்வின் செய்த 'மன்கட்' முறை அவுட். சமூக வலைதளங்களில் நேற்று முதல் பெரிய விவாதத்தையே இது கிளப்பியுள்ளது.
விதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும் விதியே சரிஎனும் போது அதில் தவறேதும் இல்லை என்றும் இரு தரப்பு நியாயங்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றன.
என்ன நடந்தால் என்ன வழக்கம் போல் நமக்கு ஒரு கண்டெண்ட் சிக்கிவிட்டது என்ற சந்தோஷத்தில் மீம் கிரியேட்டர்கள் அஸ்வினுக்கு ஆதரவாகவும், அவரை கலாய்த்தும் மீம்ஸ்களை போட்டுத்தாக்கினர். அப்படி நேற்று நடந்த அஸ்வினின் ராஜதந்திர அவுட் குறித்த மீம்ஸ் கலென்ஷனை தொகுப்பாக பார்க்கலாம்.
நன்றி : TROLL CRICKET TAMIL VERSION