"அதை மறைத்துவிட்டு நாங்கள் மூவரும் எங்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" - மப்பே!

"அதை மறைத்துவிட்டு நாங்கள் மூவரும் எங்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" - மப்பே!
"அதை மறைத்துவிட்டு நாங்கள் மூவரும் எங்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" - மப்பே!

பிரான்ஸ் நாட்டின் PSG கால்பந்தாட்ட கிளப் அணிக்காக கால்பந்தாட்ட உலகில் நட்சத்திர வீரர்களான அர்ஜென்டீனாவின் மெஸ்ஸி, பிரசில் நாட்டின் நெய்மர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கிலியன் மப்பே என மூவரும் விளையாடி வருகின்றனர். மூவரும் அந்த அணிக்காக விளையாடிய கடைசி நான்கு போட்டிகளில் தலா ஒரு கோல் மட்டுமே பதிவு செய்துள்ளது. மூவர் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர்களது ஆட்டம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதனால் அவர்கள் மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தங்கள் மீதான விமர்சனத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் 22 வயதான பிரான்ஸ் வீரர் கிலியன் மப்பே. 

“எங்கள் மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ‘அதுக்கும் மேல’ என சொல்லும் அளவுக்கு களத்தில் செயல்பட வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். அதை நாங்கள் மறைத்துவிட முடியாது. நிச்சயம் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல்படுவோம். விரைவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதி பூர்த்தி செய்வோம்” என தெரிவித்துள்ளார் மப்பே. 

நடப்பு சீசனில் லீக் 1, UEFA சாம்பியன்ஸ் டிராபி மாதிரியான போட்டிகளை சேர்த்து மொத்தமாக மூவரும் இணைந்து 16 கோல்கள் தான் அடித்துள்ளனர். அதில் மெஸ்ஸி 4 கோல், நெய்மர் 3 கோல்களை பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com