தங்கப்பதக்கம் வென்றார் மேரிகோம்

தங்கப்பதக்கம் வென்றார் மேரிகோம்

தங்கப்பதக்கம் வென்றார் மேரிகோம்
Published on

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேரிகோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். 

5 முறை உலகச் சாம்பியனான மேரிகோம், காமன்வெல்த்தில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com