உலகக்கோப்பையில் அதிக கோல்கள்.. மெஸ்ஸியை முந்திய எம்பாப்பே.. ரொனால்டோவின் இடம் என்ன ?
உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் ஃபிபா உலகக்கோப்பை தொடர் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 அணியும், உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய அணியாக கருதப்படும் பிரான்ஸ் அணியும், ஆப்ரிக்க கோப்பையை வென்ற செனக்கல் அணியும் மோதின.
இரு வலிமையான அணிகள் மோதிய இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்றது. இரு அணிகளும் மாறி மாறி தொடர்ந்து சில கோல் வாய்ப்புகளை உருவாகிக்கொண்டே இருந்தன. எனினும் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இரண்டாம் பாதியில் பிரான்ஸ் தனது வியோகத்தை மாற்றி களமிறங்கிய நிலையில், அதற்கு ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) பிரான்ஸ் அணிக்காக தனது முதல் கோலை அடித்தார்.
பின்னர் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பார்க்கோலா (Bradley Barcola) பிரான்ஸ் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க செனக்கல் அணி தொடர்ந்து முயற்சித்த நிலையில், 90 நிமிடம் முடிந்து கூடுதல் நேரத்தில் , அதாவது 95-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
அந்த அணியின் இப்ராஹிம் எம்பாயே (Ibrahim Mbaye) ஒரு அபார கோல் ஒன்றை அடிக்க ஆட்டம் 2-1 என ஆனது. இன்னும் ஒரு கோல் அடித்தால் ஆட்டத்தை சமனில் முடிக்கலாம் என செனக்கல் அணி முயற்சித்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 95-வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே இருந்து சிறப்பான கோல் ஒன்றை அடித்தார். அதன் பின் சில வினாடிகளில் ஆட்டமும் முடிவுக்கு வர பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் செனக்கல் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே இரண்டு கோல் அடித்த நிலையில், ஃபிபா கால்பந்து உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலே, மெஸ்ஸியை தாண்டி எம்பாப்பே 14 கோல்களுடன் 4-ம் இடம் பிடித்துள்ளார்.
16 கோல்களுடன் ஜெர்மனி வீரர் குளோஸ் (Miroslav Klose) முதலிடத்தில் இருக்கும் நிலையில், அவரை விஞ்ச எம்பாப்பேவுக்கு வெறும் 3 கோல்கள் மட்டுமே தேவை படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

