கேட்ச் பிடித்த பிறகு ரியான் பராக்கின் கொண்டாட்டத்தால் எரிச்சலடைந்த மேத்யூ ஹைடன்!

கேட்ச் பிடித்த பிறகு ரியான் பராக்கின் கொண்டாட்டத்தால் எரிச்சலடைந்த மேத்யூ ஹைடன்!
கேட்ச் பிடித்த பிறகு ரியான் பராக்கின் கொண்டாட்டத்தால் எரிச்சலடைந்த மேத்யூ ஹைடன்!

கேட்ச் பிடித்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கின் கொண்டாட்டத்தால் வர்ணனையாளர் மேத்யூ ஹைடன் எரிச்சலடைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றியானது ராஜஸ்தான் அணியை 16 புள்ளிகளுக்கு கொண்டு சென்றது. இன்னும் ஒரு போட்டியில் அந்த அணி இன்னும் விளையாட உள்ளது. இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 ரன்களுடன் சிறப்பாக விளையாடினார், அதே நேரத்தில் டிரென்ட் போல்ட் ராஜஸ்தான் பந்து வீச்சை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். லக்னோ அணியை சேஸிங் செய்து கொண்டிருந்தபோது, அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் எரிச்சலடைந்த ஒரு சம்பவம் நடந்தது.

ராஜஸ்தான் பவுலர் ஓபேட் மெக்காய் வீசிய 19வது ஓவரின் போது , லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் டீப் மிட்-விக்கெட் பகுதியை நோக்கி ஒரு பந்தை அடித்தார், ஆனால் லாங் ஆனில் நின்று கொண்டிருந்த ரியான் பராக் அது ஒரு அற்புதமான கேட்சை பிடித்தது போல் தோன்றியது. இருப்பினும், ரீபிளே செய்து பார்த்த பிறகு, மூன்றாவது நடுவர் பராக் பிடிப்பதற்கு சற்று முன்பு பந்து தரையில் பட்டு பவுன்ஸ் ஆகிவிட்டதாக அறிவித்தார். அடுத்த ஓவரில், ஸ்டோனிஸ் மற்றொரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். இந்த முறை பராக் அந்த எளிய கேட்சை பிடித்தார். கேட்சை எடுத்த பிறகு, பராக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். முன்பு நாட் அவுட் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வகையில் புல்லுக்கு சற்று மேலே கேட்சை எடுத்தது போல் சைகை செய்தார்.

இச்செயலால் அந்த நேரத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹேடன் மகிழ்ச்சியடையவில்லை. “இளைஞனே, உனக்காக சில அறிவுரைகள் கிடைத்துள்ளன, கிரிக்கெட் என்பது மிக நீண்ட விளையாட்டு. மேலும் நம் அனைவருக்கும் மிக நீண்ட நினைவுகள் உள்ளன. நீங்கள் ஒருபோதும் விதியை சோதிக்க மாட்டீர்கள். ஏனென்றால் அது விரைவாகச் சுற்றி வந்துவிடும்.” என்று கூறினார் ஹைடன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com