வெறும் 33 ரன்னில் புதிய சாதனை ! செய்வாரா 'தல' தோனி ?

வெறும் 33 ரன்னில் புதிய சாதனை ! செய்வாரா 'தல' தோனி ?
வெறும் 33 ரன்னில் புதிய சாதனை ! செய்வாரா 'தல' தோனி ?

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று டிரண்ட் ப்ரிட்ஜில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 டி20 தொடர் போட்டியை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக தோனி எட்டிவிடுவார் என்று எதிர்ப்பார்த்த 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை இந்தத் தொடரில் எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் 33 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் தோனி 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை படைப்பார்.

அதவும் வெறும் 33 ரன்களை இன்றைய முதல் போட்டியிலேயே தோனி எட்டி விடுவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்திய அணியைப் பொருத்தவரை ஏற்கெனவே சச்சின் (18,426), கங்குலி(11,363), டிராவிட்(10,889) ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை 4வது வீரராக 10 ஆயிரம் ரன்களை எட்டவுள்ளார். அதேபோல், சர்வதேச அளவில் 12வது வீரராக அவர் இந்த மைல்கல்லை எட்டவுள்ளார். தோனிக்கு அடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி 9,588 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை 18 ஆயிரம் சொச்சம் ரன்களை எடுத்து சச்சின் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக 10 ஆயிரம் ரன் குவித்தவர்கள் இலங்கையின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, இலங்கையின் மகேல ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, இலங்கையின் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் மட்டுமே இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com