பாக்சிங் டே டெஸ்ட் பார்வையாளர் ஒருவருக்கு கொரோனா: சிட்னி மைதானத்தில் மாஸ்க் கட்டாயம்!

பாக்சிங் டே டெஸ்ட் பார்வையாளர் ஒருவருக்கு கொரோனா: சிட்னி மைதானத்தில் மாஸ்க் கட்டாயம்!
பாக்சிங் டே டெஸ்ட் பார்வையாளர் ஒருவருக்கு கொரோனா: சிட்னி மைதானத்தில் மாஸ்க் கட்டாயம்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் சிட்னியில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பார்வையாளராக பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாளை மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 48 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்கும் வசதி கொண்ட சிட்னி மைதானம் தற்போது 10 ஆயிரம் பேர் மட்டும் பார்க்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், நாளை தொடங்கவுள்ள மூன்றாவது போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னரும் வருகை தந்துள்ளது அந்த அணிகளுக்கு பலத்தை கூட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com