\
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம் 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம் 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம் 
Published on

உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் தனது 8வது பதக்கத்தை மேரி கோம் உறுதி செய்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகள் தற்போது ரஷ்யாவின் உலான்-உடே (Ulan-Ude) பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் எம்.சி.மேரி கோம் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் அவருக்கு ‘பை’ அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் மேரி கோம் தாய்லாந்து நாட்டின் ஜூடாமஸ் ஜிட்போங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் கொலம்பியா நாட்டின் வெலன்சியா விக்டோரியாவை 5-0 என்ற கணக்கில் மேரி கோம் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார். அத்துடன் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் இது மேரி கோம் பெறவிருக்கும் 8ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே இவர் 6 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com