"கொரோனா பாதித்தவரிடம் நான் கை குலுக்கவில்லை" - மேரி கோம் !

"கொரோனா பாதித்தவரிடம் நான் கை குலுக்கவில்லை" - மேரி கோம் !
"கொரோனா பாதித்தவரிடம் நான் கை குலுக்கவில்லை"  - மேரி கோம் !

குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது கொரோனா பாதிப்பு கொண்டதாக கூறப்படும் துஷ்யந்தை சந்திக்கவும் இல்லை, கைகுலுக்கவும் இல்லை என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிக்கு மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் தகுதி பெற்றுள்ள அவா், ஜோர்டானில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று முடிந்து புது தில்லி திரும்பினார். கொரோனா வைரஸ் பாதிப்பு இடையே இப்போட்டிகள் நடைபெற்று முடிந்தது. மேரி கோம் ஜோர்டான் சென்று வந்த பின் 14 நாள் தனிமையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை மீறி அவர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் மற்ற எம்பிக்களுடன் கலந்து கொண்டுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்தது. அதே விருந்தில் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ள எம்பி துஷ்யந்த் சிங் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேரி கோம் " ஜோர்டான் போட்டிக்கு முன்னதாக இத்தாலியில் பயிற்சி பெற்று வந்தோம். அங்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில் நாங்கள் திரும்பினோம். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அனைத்து வீரா், வீராங்கனைகளுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் குழந்தைகளுடன் ஆடுவது, உடல்தகுதி, பயிற்சி செய்வது போன்றவை மேற்கொள்கிறேன். தனிமைப்படுத்திக் கொண்டதால், என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது. மேலும் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கத் தேவையில்லை. தினசரி பயிற்சி அட்டவணை என்ற அழுத்தம் இல்லாமல் ஓரளவு சுதந்திரமாக உணர்கிறேன். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதால், கூட்டத்தொடா் முடிவதற்கு சில நாள்கள் முன்பு செல்ல உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

அலட்சியமாக வெப்பமானியை வைத்து சோதித்த அதிகாரி பணியிடை நீக்கம் 

குடியரசுத் தலைவர் விருந்தில் கலந்துக்கொண்டது குறித்து பேசிய மேரி கோம் "எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அதனால் மார்ச் 18 ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் கலந்துக்கொண்டேன். அங்கே துஷ்யந்த் சிங் என்பவரை பார்க்கவுமில்லை கை குலுக்கவும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com