ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்: ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய லபுஷேன் பிடித்த கேட்ச்!

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்: ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய லபுஷேன் பிடித்த கேட்ச்!

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்: ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய லபுஷேன் பிடித்த கேட்ச்!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 26 வயது வீரரான மார்னஸ் லபுஷேன் அந்த நாட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பிடித்த விசித்திர கேட்ச் தற்போது ட்விட்டரில் விவாதப் பொருளாகி உள்ளது. 

அந்த போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கொடுத்த கேட்ச் ஒன்றை கவர் திசையில் பீல்ட் செய்து கொண்டிருந்த லபுஷேனின் கைகளில் தஞ்சமடைந்தது. அந்த கேட்சை பின்பக்கமாக நகர்ந்தபடி பிடித்திருந்தார். இருப்பினும் கேட்ச் பிடித்த சில நொடிகளில் பந்தை கீழே போட்டிருந்தார் அவர். அது தான் விவாதத்திற்கு காரணமாகி உள்ளது. 

அது கேமிராவில் பார்ப்பதற்கு பந்தை தவறவிட்டது போலவே இருந்தது. அது தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தை சமூக வலைத்தளம் மூலம் சொல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த கேட்ச் மூலம் நியூ சவுத் வேல்ஸ் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com