\
ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான 3-ஆவது சுற்று டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா மற்றும் செக் குடியரசின் மார்கெட்டா ஆகியோர் மோதினர். இதில் மார்கெட்டா சிறப்பாக விளையாடி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து காலிறுதி போட்டிக்கு மார்கெட்டா தகுதிப் பெற்றார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக அண்மையில் நடந்து முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்கூட பங்கேற்காமல் இருந்தார் நவோமி ஒசாகா என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com