அர்ஜூனா விருது பெற்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன்
விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு குடியரசுத் தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா, பாராலிம்பிக் வீரர் தேவேந்திரா ஜஜாரியா, ஹாக்கி வீரர் சர்தாரா சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீரர் ஆண்டனி அமல்ராஜ், தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் விருது, பூபிந்தர் சிங், சையது ஷாகித் ஹகிம், சுமராய் திதே ஆகியோருக்கு கிட்டின. இதேபோல் பயிற்சியாளர்களுக்கான துரோணச்சாரியர் விருது, பேட்மிண்டன் பயிற்சியாளர் ஜிஎஸ்எஸ்வி பிரசாத்துக்கு வழங்கப்பட்டது.