விளையாட்டு
ஆஸி. ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிலிச்
ஆஸி. ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிலிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் குரேஷிய வீரர் மரின் சிலிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆறாம் நிலை வீரரான மரின் சிலிச் அரையிறுதியில் பிரிட்டன் வீரர் கைல் எட்மண்ட்டை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மரின் சிலிச் 6-2, 7-6, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரேஷியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற சிறப்பை சிலிச் பெற்றார். இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் ஃபெடரர், தென்கொரிய வீரர் ஹியேன் சங்கை எதிர்த்து விளையாடுகிறார்.