ஓய்வு முடிவை அறிவித்தார் மரியா ஷரபோவா..!

ஓய்வு முடிவை அறிவித்தார் மரியா ஷரபோவா..!
ஓய்வு முடிவை அறிவித்தார் மரியா ஷரபோவா..!

ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான ஷரபோவா 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். முன்னாள் முதல் நிலை வீராங்கனையான அ‌வர், இறுதியாக கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்றார். ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 2016-ஆம் ஆண்டில், ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது.

தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பிய அவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது ஓய்வு முடிவை ஷரபோவா அறிவித்துள்ளார். 2004-ம் ஆண்டு செரீனா வில்லியம்சை நேர் செட்டில் தோற்கடித்து விம்பிள்டன் பட்டம் வென்றார் மரியா ஷரபோவா. அப்போது அவருக்கு வயது 17.

டென்னிஸ் உலகை உற்றுநோக்க வைத்த மரியா, 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனிலும் பட்டம் வென்றார். இந்நிலையில் தற்போது ஓய்வு முடிவை ஷரபோவா அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com