\
இந்தியா வருகிறார் மாரடோனா

இந்தியா வருகிறார் மாரடோனா

இந்தியா வருகிறார் மாரடோனா
Published on: 

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 
அடுத்த மாதம் மூன்றாம் தேதி கொல்கத்தா வரும் அவர், இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முன்னாள் வீரர்களான பெய்ச்சுங் பூட்டியா, சுனில் சேத்ரி, விஜயன் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். 
சுற்றுப்பயணத்தின் முக்கிய அம்சமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் உடன் மாரடோனா கலந்துரையாட உள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் ஐந்தாம் தேதி மாரடோனாவின் அணியும், கிரிக்கெட் நாயகன் கங்குலியின் கால்பந்து அணியும் காட்சிப் போட்டியில் விளையாடுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com