‘மன்கட் முறையில் அவுட் செய்யாமல் ரஷித்தை எச்சரித்த ஸ்டார்க்’ - அஸ்வினை குறிப்பிட்ட ரசிகர்!

‘மன்கட் முறையில் அவுட் செய்யாமல் ரஷித்தை எச்சரித்த ஸ்டார்க்’ - அஸ்வினை குறிப்பிட்ட ரசிகர்!
‘மன்கட் முறையில் அவுட் செய்யாமல் ரஷித்தை எச்சரித்த ஸ்டார்க்’ - அஸ்வினை குறிப்பிட்ட ரசிகர்!

மன்கட் முறையில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித்தை அவுட் செய்யமால் எச்சரித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் செயலை குறிப்பிட்டு அஸ்வினுக்கு ட்விட்டரில் ரசிகர் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் 112 (126) ரன்கள் குவித்தார். அத்துடன் பில்லிங்ஸ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்ஜெல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஆதம் ஷம்பா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 73 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கரே மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தனர். கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 3 பந்துகளில் 11 ரன்களை விளாசி வெற்றிக்கு காரணமாக ஸ்டார்க் இருந்தார். இதற்கிடையே இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது பந்துவீசிக்கொண்டிருந்த ஸ்டார்க், அடில் ரஷித் பந்துவீசுவதற்கு முன்பே ரன் ஓட முயன்ற போது, அவரை மன்கட் முறையில் அவுட் செய்யவதுபோல நின்றார். ஆனால் அவுட் செய்யாமல் ஸ்டார்க் எச்சரித்து விட்டுச்சென்றார்.

இந்த காட்சியை ட்விட்டரில் குறிப்பிட்ட கிரிக்கெட் ரசிகர் ஒருவர், அஸ்வின் இதனை கற்றுக்கொள்ளுங்கள் எனவும், இப்படி தான் விளையாட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதற்கு தனது பாணியில் பதிலளித்திருந்த அஸ்வின், “போட்டியின்போது நல்லமுறையில் போரிடுவதையே நான் நம்புகிறேன். ஆனால், நீங்கள் நாளை மறுநாள் வரை காத்திருங்கள், இதுதொடர்பாக நான் மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். இதற்காக எனக்கு நானே ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரை பந்துவீசும்போது அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com