விஜய் ஹசாரே கோப்பை: விளாசினார் மணிஷ் பாண்டே, வென்றது கர்நாடகா

விஜய் ஹசாரே கோப்பை: விளாசினார் மணிஷ் பாண்டே, வென்றது கர்நாடகா
விஜய் ஹசாரே கோப்பை: விளாசினார் மணிஷ் பாண்டே, வென்றது கர்நாடகா

விஜய் ஹசாரே உள்ளூர் கோப்பைக்கான போட்டியில் மணிஷ் பாண்டேயின் சிறப்பான ஆட்டத்தால் கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டி தொடர் இப்போது நடந்து வருகிறது. குரூப் ஏ பிரிவில் கர்நாடகா, சத்தீஷ்கர் அணிகள் நேற்று மோதின. முதலில் ஆடிய கர்நாடக அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மணிஷ் பாண்டே 118 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் ஆடிய சத்தீஷ்கர் அணி, 44.4 ஓவரில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக காரே 43 ரன்களும் சந்திரகர் 42 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கர்நாடகா தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோனித் மோரே 2 விக்கெட்டுகளையும் கிருஷ்ணப்பா கவுதம், கவுசிக் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com