தமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!

தமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!

தமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே, தமிழ் நடிகையை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள் ளது

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே. பெங்களூரைச் சேர்ந்த இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இப்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் அவர், நடிகை ஹர்ஷிதா ஷெட்டியை மணக்க இருக்கிறார். மும்பையை சேர்ந்த ஹர்ஷிதா, தமிழில் ’உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

ஹர்ஷிதாவும் மணிஷ் பாண்டேவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

இதில் ஏராளமான கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று தெரிகி றது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com