ஐபிஎல் மெகா ஏலம்: மணிஷ் பாண்டேவை பிக் செய்தது லக்னோ அணி

ஐபிஎல் மெகா ஏலம்: மணிஷ் பாண்டேவை பிக் செய்தது லக்னோ அணி
ஐபிஎல் மெகா ஏலம்: மணிஷ் பாண்டேவை பிக் செய்தது லக்னோ அணி

கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மணிஷ் பாண்டே எதிர்வரும் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரை அந்த அணி 4.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மொத்தம் 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3560 ரன்களை எடுத்துள்ளார். 

32 வயதான மணிஷ் பாண்டே ஐபிஎல் அரங்கில் மும்பை, பெங்களூர், புனே, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளார். தற்போது லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். களத்தில் அபாரமாக ஃபீல்ட் செய்பவர். 

கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 292 ரன்கள் எடுத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹெட்மயரை 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com