10 சிக்சர், 12 பவுண்டரியுடன் 54 பந்தில் 129 ரன் குவித்த மணிஷ் பாண்டே!

10 சிக்சர், 12 பவுண்டரியுடன் 54 பந்தில் 129 ரன் குவித்த மணிஷ் பாண்டே!

10 சிக்சர், 12 பவுண்டரியுடன் 54 பந்தில் 129 ரன் குவித்த மணிஷ் பாண்டே!
Published on

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக, இன்று ஆடிய கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே அபார சதமடித்தார்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் ’குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள கர்நாடக அணியும், சர்வீசஸ் அணியும் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இன்று மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. 

தொடக்க ஆட்டக்காரர், படிக்கல் 43 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். கேப்டன் மணிஷ் பாண்டே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து, அதிரடியாக விளையாடினார். சர்வீசஸ் அணி கேப்டன், பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் 54 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 12 பவுண்டரிகளும் அடங்கும்.  

இதையடுத்து இந்த இமாலய இலக்கை நோக்கி சர்வீசஸ் அணி ஆடிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com