\
அதிவேக அரை சதம்: சாதனை மந்தனாவுக்கு சரமாரி பாராட்டு!

அதிவேக அரை சதம்: சாதனை மந்தனாவுக்கு சரமாரி பாராட்டு!

அதிவேக அரை சதம்: சாதனை மந்தனாவுக்கு சரமாரி பாராட்டு!
Published on

இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய வீராங்கனை மந்தனா அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

இங்கிலாந்தில் டி 20  பெண்கள் கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. கியா சூப்பர் லீக் தொடரான இதில், நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஸ்டோம் அணியும், லாஹ்போரோ லைட்னிங் அணியும் மோதின. மழை காரணமாக 6 ஓவராக போட்டி மாற்றப்பட்டது.

முதலில் பேட் செய்த வெஸ்டர்ன் ஸ்டோம் அணி சார்பில் களம் இறங்கிய இந்தியாவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, அதிரடியாக விளையாடினார். அவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த நியூசிலாந்தின் சோபி டிவைன் சாதனையை சமன் செய்தார். மந்தனா 19 பந்துகளில் நான்கு சிக்சர், ஐந்து பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். 

மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி, 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய லாபோரா லைட்னிங் அணியால் 6 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தோல்வியை தழுவியது.

22 வயதான மந்தனா மும்பையை சேர்ந்தவர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை. இந்த போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனையும் அவர்தான். 41 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வந்தனா, 1464 ரன்கள் எடுத்துள்ளார். அதிகப்பட்சமாக 135 ரன்கள் அடித்துள்ளார். 42 டி20 போட்டியில் விளையாடி 857 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com