ஐபிஎல் புதிய அணியை வாங்குகிறது மேன்செஸ்டர் யுனைடெட்?

ஐபிஎல் புதிய அணியை வாங்குகிறது மேன்செஸ்டர் யுனைடெட்?
ஐபிஎல் புதிய அணியை வாங்குகிறது மேன்செஸ்டர் யுனைடெட்?
ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு அணியை வாங்க மேன்செஸ்டர் யுனெடைட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியில் தற்போது 8 அணிகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில், டிசம்பர் மாதம் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் புதிய அணிகளில் ஒன்றை வாங்க ஐரோப்பாவின் பிரபல கால்பந்து அணிகளில் ஒன்றான மேன்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டெண்டர் தேதியை அக்டோபர் 5ல் இருந்து அக்டோபர் 10க்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேன்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com