இங்கிலீஸ் ப்ரீமியர் லீக்: மேன்செஸ்டர் சிட்டி புதிய சாதனை

இங்கிலீஸ் ப்ரீமியர் லீக்: மேன்செஸ்டர் சிட்டி புதிய சாதனை

இங்கிலீஸ் ப்ரீமியர் லீக்: மேன்செஸ்டர் சிட்டி புதிய சாதனை
Published on

இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் மேன்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மேன்செஸ்டர் யுனைடெட் அணியும், மேன்செஸ்டர் சிட்டி அணியும் மோதின. சமபலம் வாய்ந்த இரு அணிகளும்  மோதிய போட்டி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இந்தப்போட்டியில் 2-1  என்ற கோல் கணக்கில் மேன்செஸ்டர் சிட்டி அணி வென்றது. இதன் மூலம் இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்திருந்த செல்சி, ஆர்சனல் ஆகிய அணிகளின் சாதனையை மேன்செஸ்டர் சிட்டி அணி முறிடியத்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில், மேன்செஸ்டர் சிட்டி அணி 46 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மேன்செஸ்டர் யுனைடெட் அணி 35 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com