”காதலியுடன் டேட்டிங் போகணும் ரூ300 கொடுங்க”-கமெண்ட் செய்தவருக்கு அமித் மிஸ்ரா கொடுத்த ஷாக்

”காதலியுடன் டேட்டிங் போகணும் ரூ300 கொடுங்க”-கமெண்ட் செய்தவருக்கு அமித் மிஸ்ரா கொடுத்த ஷாக்
”காதலியுடன் டேட்டிங் போகணும் ரூ300 கொடுங்க”-கமெண்ட் செய்தவருக்கு அமித் மிஸ்ரா கொடுத்த ஷாக்

ட்விட்டர் பதிவின் கமெண்டில் காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 கேட்ட இளைஞருக்கு கூகுள் பே மூலமாக ரூ.500 அனுப்பினார் அமித் மிஸ்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவின் கமெண்டில் ஒரு நபர் தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 தேவைப்படுவதாகவும், கொடுத்து உதவுமாறும் கேட்டிருந்தார். இதையடுத்து, மற்றொரு நபர், பணம் கேட்ட நபரிடம் யுபிஐ விவரங்களை பகிருமாறு ரிப்ளே செய்திருந்தார். உடனே அந்த நபர் தனது கூகுள்பே எண்ணை பகிரவே, அந்த எண்ணுக்கு ரூ.500 அனுப்பி வைத்தார் அமித் மிஸ்ரா. பணம் அனுப்பிய ஸ்கீரின்ஷாட்டை தனிப்பதிவாக பகிர்ந்த அமித் மிஸ்ரா, 'டேட்டிங் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். பணம் பெற்றுக்கொண்ட அந்த நபர் நன்றி தெரிவித்ததுடன், விரைவில் 500 ரூபாயை திருப்பித் தந்துவிடுவதாகவும் கமெண்ட்  செய்துள்ளார்    

இதையடுத்து மற்ற நெட்டிசன்களும் ஆளாளுக்கு பணம் கேட்டு அமித் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஹைதராபாத் ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட ரூ.500 அனுப்பி வைக்குமாறு கமெண்ட் செய்திருக்கிறார் ஒரு நபர்.

இதையும் படிக்க:  ’அண்ணா, அங்கிள்னு கூப்டாதீங்க’ : Uber டிரைவரின் பாஸ் லெவல் கோரிக்கை: வைரல் பதிவின் பின்னணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com