ஐபிஎல்-2019: முதல் 6 போட்டிகளில் மலிங்கா அவுட்!
உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டியிருப்பதால், ஐபிஎல் தொடரில் முதல் ஆறு ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரும் மும்பை இண்டியன்ஸ் அணி வீரருமான லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்
12 வது ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. மும்பை இண்டியன்ஸ் அணியில் கடந்த தொடரில் பந்துவீச்சு ஆலோசகராக இருந்த மலிங்கா, இந்த தொடரில் விளையாட இருக்கிறார்.
இதற்கிடையே, உலகக் கோப்பைக்குத் தொடருக்கு வீரர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால், உள்ளூர் போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், உள்ளூரில் நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் மலிங்கா விளையாட இருக்கிறார். அவர், காலே அணியின் கேப்டனாகவும் நிய மிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐபிஎல் தொடரில் முதல் ஆறு போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஆட முடியாது என மலிங்கா தெரிவித்துள்ளார்.