பாகிஸ்தானுடன் உடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி, இலங்கை அணியுடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அபுதாபியில் நடந்தது. இதில் இலங்கை அபார வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி, துபாயில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகளில் இருந்து
அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா நீக்கப்பட்டுள்ளார். அதோடு தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகாவும் நீக்கப்பட்டுள்ளார்.
‘மலிங்காவின் சமீபத்திய பார்ம் கேள்விக்குறியாக உள்ளது என்பதால் அவர் அணியில் பரிசீலிக்கப்படவில்லை’ என்று இலங்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக மேத்யூஸும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது