டி-20 போட்டியில் அதிக விக்கெட்: மலிங்கா சாதனை

டி-20 போட்டியில் அதிக விக்கெட்: மலிங்கா சாதனை
டி-20 போட்டியில் அதிக விக்கெட்: மலிங்கா சாதனை

டி-20 கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார், இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் மலிங்கா, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இப்போது டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.  நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று நடந்தது. 

முதலில் ஆடிய இலங்கை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, 5 விக்கெட் டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி-20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை பெற்றார். அவர் 74 டி-20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி இருக்கிறார். அவர் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com