நியூசிலாந்தில் வீரர், வீராங்கனைகளுக்கு இனி சம ஊதியம்! எந்த விளையாட்டில் தெரியுமா?

நியூசிலாந்தில் வீரர், வீராங்கனைகளுக்கு இனி சம ஊதியம்! எந்த விளையாட்டில் தெரியுமா?
நியூசிலாந்தில் வீரர், வீராங்கனைகளுக்கு இனி சம ஊதியம்! எந்த விளையாட்டில் தெரியுமா?

நியூசிலாந்து நாட்டில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட உள்ளது. தொழிற்முறை கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான 5 ஆண்டு ஒப்பந்தத்தை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி உள்நாடு மற்றும் உலக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்துக்காக விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் இருவருக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே ஊதியம் வழங்குவதாக நெடுங்காலமாக உலகெங்கும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த சம ஊதிய முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய நியூசிலாந்து ஆடவர் கேப்டன் கேன் வில்லியம்சன் “இது விளையாட்டிற்கு சுவாரஸ்யமான நேரம். தற்போதைய வீரர்கள் நமக்கு முன் சென்றவர்களின் பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதும், நாளைய வீரர்களான ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினரையும் அனைத்து மட்டங்களிலும் ஆதரிப்பதும் மிகவும் முக்கியம். இந்த ஒப்பந்தம் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com