“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கோரி விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே தோனி தன்னுடைய பெயரில் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளார்.
இந்நிலையில், ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் ரிவால்வர் வைத்துக் கொள்ள அனுமதி கோரி சாக்ஷி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்த விண்ணப்பத்தில், “ராஞ்சியில் பெரும்பாலான நாட்கள் தனியாகவே இருக்கிறேன். என்னுடைய வேலைக்காக தனியாகத்தான் சென்று வருகிறேன். எனது பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்கிறேன்” என்று சாக்ஷி குறிப்பிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
சாக்ஷி மீது மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் சிக்கல் ஏதும் இல்லாதபட்சத்தில் ரிவால்வர் லைசென்ஸ் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
ராஞ்சியின் ஹார்மு ஹவுஸ் காலனியில் இருந்து வந்த தோனி, தனது குடும்படுத்துடன் தலதாளி பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்கு கடந்த ஆண்டு குடியேறினார்.