வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!

வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!

ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டி மும்பை - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் சர்பராஸ் கானின் சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் அரைசதத்தின் உதவியுடன் 374 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேச ஓப்பனர்கள் யஷ் துபே மற்றும் ஹிமான்சு மந்திரி ஆகியோர் மும்பை பவுலர்களுக்கு கடும் சவால் அளித்தனர். ஹிமான்சு 31 ரன்களில் ஆட்டமிழக்க, யஷ் துபே சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய இருவரும் மும்பை பவுலர்களை கடுமையாக சோதித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்த போது, படிதார் கொடுத்த கேட்சை சரியாக பிடித்தபோதிலும், அது நோ பாலாக அறிவிக்கப்பட்டதால் மும்பை பவுலர்கள் சோர்வடைந்தனர். மளமளவென இருவரும் போட்டி போட்டு ரன் குவித்து இருவரும் சதம் கடந்தனர். இதன்பின் வந்தவர்கள் கடகடவென அவுட்டான போதிலும், சாரன்ஷ் ஜெயின் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாச 500 ரன்களை அசால்ட்டாக கடந்தது மத்தியப் பிரதேச அணி.

இதையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மத்தியப் பிரதேச அணி 536 ரன்களை குவித்தது. அணியில் அபாரமாக விளையாடிய யஷ் துபே, சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய மூவரின் சதத்தால் இந்த இமாலய ஸ்கோரை எட்டியது மத்திய பிரதேச அணி. 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை துவங்கிய மும்பை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஓப்பனர்களான பிரித்வி ஷா மற்றும் ஹர்திக் தமோர் இருவரையும் அரைசதத்தை கூட நெருங்க விடாமல் வெளியேற்றினர் ம.பி. பவுலர்கள். 4 ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மும்பை அணி குவித்தது. 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் 5 ஆம் நாள் ஆட்டத்தை எப்படியும் மும்பை டிரா செய்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியப் பிரதேச பவுலர்கள் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கினர்.

சுவேத் பர்கார் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் மட்டும் முறையே 51,45 ரன்களை குவிக்க, மற்ற அனைவரும் 5 ஓவர்கள் கூட பந்துகளை சந்திக்க இயலாமல் பெவிலியனுக்கு “பேஷன் ஷோ” நடத்த துவங்கினர். இதனால் 268 ரன்களை எட்டுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மும்பை அணி. ம.பி. தரப்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பந்துவீசினார் குமார் கார்த்திகேயா.

கவுரவ் யாதவ் மற்றும் பார்த் சஹானி ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பைக்கு நெருக்கடி அளித்தனர். 108 ரன்களை எட்டினால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணிக்கும் மும்பை பவுலர்கள் அதிர்ச்சி அளிக்க தவறவில்லை. யஷ் துபே, பார்த் சஹானி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.

ஆனால் ஹிமான்சு மந்திரி, சுபம் ஷர்மா, ரஜத் படிதார் ஆகிய மூவரும் பொறுப்பாக விளையாடி தலா 30 ரன்களை கடந்ததால் 30வது ஓவரில் இலக்கை எட்டி தனது முதல் ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது மத்திய பிரதேச அணி.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Madhya Pradesh defeats Mumbai by 6 wickets to win their first-ever <a href="https://twitter.com/hashtag/RanjiTrophy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RanjiTrophy</a> title at M. Chinnaswamy Stadium in Bengaluru.<a href="https://t.co/OTP5b1KHWX">pic.twitter.com/OTP5b1KHWX</a></p>&mdash; All India Radio News (@airnewsalerts) <a href="https://twitter.com/airnewsalerts/status/1541014372687835136?ref_src=twsrc%5Etfw">June 26, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com