நடிகர் மாதவனின் மகன் சர்வதேச பதக்கத்தை வென்றுள்ளார்.
சாக்லெட் பாய் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர் மாதவன். அவருக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். சிறு வயது முதலே முறையாக நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்திய அணி சார்பில் வேதாந்த் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற போட்டியில் அவர் வெங்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். அதற்கான படங்களை அவரது தந்தை மாதவன் வெளியிட்டுள்ளார். நாட்டிற்காக வெங்கலம் வென்ற வீரரை அவர் வாழ்த்தியுள்ளார். அந்த வாழ்த்தில் அவர் “எனக்கும் என் மனைவி சரிதாவிற்கும் பெருமிதமான தருணம் இது. இந்தியாவிற்காக வேதாந்த் வாங்கியுள்ள முதல் பதக்கம் இது. அதற்காக அவனுக்கு நன்றி. அவனை நீங்கள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.