கவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்

கவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்

கவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்
Published on

தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதற்கான டெஸ்ட் அணியில் தமிழகத்தை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் சரியாக விளையாட வில்லை. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார்.

இதையடுத்து மோசமான பார்ம் காரணமாக மற்ற போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.  இந்தியா திரும்பிய அவர், ‘விரைவில் அணிக்கு மீண்டும் திரும்புவேன். அணியில் இருந்து நான் நீக்கப்படுவது இது முதன் முறையல்ல. சில விஷயங்களில் முன்னேற வேண்டியிருக்கிறது. அதை சரி செய்துவிட்டு அதிக ரன்கள் குவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுபற்றி விஜய் கூறும்போது, ‘எஸ்செக்ஸ் அணிக்காக பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். சில ஆட்டங்களில் வெற்றிக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். 

இந்த சீசனில் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்செக்ஸ் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com