நிறைவேறுமா இ சாலா கப் கனவு! எலிமினேட்டரில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு!

நிறைவேறுமா இ சாலா கப் கனவு! எலிமினேட்டரில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு!
நிறைவேறுமா இ சாலா கப் கனவு! எலிமினேட்டரில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு!

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்த லக்னோ -பெங்களூர் அணிகள் இன்று ‘எலிமினேட்டர்’ என்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன.

அறிமுக அணியான லக்னோ முதல் தொடரிலேயே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. லீக் சுற்று முழுவதுமே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. குயிண்டன் டிகாக், ராகுல், தீபக் ஹூடா ஆகியோர் அபார ஃபார்மில் உள்ளனர்.

ஆவேஷ் கான், மோசின் கான் ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். ஆல் ரவுண்டராக ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோர் கைகொடுக்கின்றனர். லீக் போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியுற்றதற்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது லக்னோ அணி.

அதே சமயம் டு பிளெஸ்ஸி தலைமையிலான பெங்களூர் அணியும் முதன்முறையாக கோப்பையை முத்தமிட வரிந்து கட்டுவதால் லக்னோ அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக், ஹர்ஷல், மேக்ஸ்வெல், ஹேசல்வுட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடைசியாக நடந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதும் ஆர்சிபி அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், சிராஜ், ஹசரங்கா ஆகியோரை மலைபோல நம்பியிருக்கிறது ஆர்சிபி. இந்த இசாலா கப்பை நமதாக்க உத்வேகத்துடன் களமிறங்குகிறது பெங்களூரு அணி. இரு அணிகளுமே வெற்றிக்காக மிகத் தீவிரமாக போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதியே! மழை காரணமாக டாஸ் 25 நிமிடங்கள் தாமதமாகவே போடப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், KL ராகுல், எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மோசின் கான், அவேஷ் கான், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com