ராஜஸ்தானிடம் லக்னோ அணி தோல்வி - பேட்ஸ்மேன்கள் மீது கேஎல் ராகுல் அதிருப்தி

ராஜஸ்தானிடம் லக்னோ அணி தோல்வி - பேட்ஸ்மேன்கள் மீது கேஎல் ராகுல் அதிருப்தி
ராஜஸ்தானிடம் லக்னோ அணி தோல்வி - பேட்ஸ்மேன்கள் மீது கேஎல் ராகுல் அதிருப்தி

இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 63-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 179 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 24  ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

லக்னோ அணியின் முன்வரிசை மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஆடியதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் வந்த தீபக் ஹூடா (59 ரன்கள்), குருனால் பாண்டியா (25 ரன்கள்), ஸ்டாய்னிஸ் (27 ரன்கள்) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினர்.

இந்த வெற்றியால் 13 போட்டிகளில் 8 வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி அடைந்த லக்னோ தற்போது 13 போட்டிகளில் 8 வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் உள்ளது. இது லக்னோ அணிக்கு தொடர்ச்சியான இரண்டாவது தோல்வி ஆகும்

தோல்விக்குப் பின் பேட்டியளித்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், ''இது எட்டக்கூடிய இலக்குதான். புதிய பந்து பவுலர்களுக்கு உதவியாக இருந்தது. எங்களது பேட்டிங்  ஒருசில ஆட்டங்களில் கூட்டாக செயல்படவில்லை. நாங்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். புனே ஆடுகளம் கடினமாக இருந்தது. ஆனால் இது ஒரு சிறந்த மைதானம். ராஜஸ்தான் பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். இரண்டு விக்கெட்டுகளை இழந்தது மோசமான நிலைக்கு தள்ளியது. எனவே நல்ல தொடக்கத்தைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். விரும்புவதைச் செயல்படுத்துவதே எங்களது குறிக்கோள்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com