லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜோதி - முன்னாள் தடகள வீரர் ரஃபர் ஜான்சன் ஏற்றினார்
2028-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதை ஒட்டி அந்நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
உலகின் மிக பாரம்பரியமான விளையாட்டு தொடர்களில் முதன்மையிடம் வகிக்கும் ஒலிம்பிக் போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைக்கால போட்டிகள் மற்றும் குளிர்கால போட்டிகள் என இரண்டு முறை நடைபெறுகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. வரும் 2020-ம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. அதேபோல், 2028-ம் ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் டெகத்லான் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க தடகள வீரர் ராஃபர் ஜான்சனும்(RAFER JOHNSON), லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயர் எரிக் கர்சிட்டி(ERIC GARCETTI) ஆகியோர் இணைந்து நவீன முறையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.