"என் வாழ்க்கையிலேயே இத்தனை நாள்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை"-ரோகித் சர்மா !

"என் வாழ்க்கையிலேயே இத்தனை நாள்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை"-ரோகித் சர்மா !

"என் வாழ்க்கையிலேயே இத்தனை நாள்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை"-ரோகித் சர்மா !
Published on

என் கிரிக்கெட் வாழ்க்கையில் இத்தனை நாள்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

"ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ" இணையதளத்துக்கு பேட்டியளித்த ரோகித் சர்மா "நான் கிரிக்கெட் விளையாட தொடங்கி இத்தனை நாள்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இப்போது மீண்டும் தொடங்கும்போது சவாலானதாகவே இருக்கும். விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவுக்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் இந்த 4 மாதங்களாக உடல்ரீதியாக உறுதியாகவே இருக்கிறேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை. நான் பயிற்சியை மைதானத்துக்கு சென்று ஈடுபட இருக்கிறேன். அப்போதுதான் துபாயின் 40 டிகிரி வெயிலுக்கு விளையாட பழகிக்கொள்ள முடியும். ஆனால் அவ்வளவு சாதாரணமானதல்ல" என்கிறார் ரோகித் சர்மா.

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா "ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம்பிக்கை அதிகமாகும். இதற்கு முன்பு ஐபிஎல் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com