\
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?
Published on

2022ஆம் ஆண்டு கணக்கு படி உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் பல முன்னாள் வீரர்கள் சக கிரிக்கெட் வீரர்களை முந்தி முன்னிலையில் இருக்கின்றனர். பல முன்னாள் இந்திய வீரர்கள் முதல் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

உலக அரங்கில் கால்பந்து மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளுக்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான். கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் முன்னாள் வீரர்களின் செய்தி அப்டேட்கள் கூட எல்லோராலும் இன்றும் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், தனியார் அறிக்கை ஒன்று உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பெயர் பட்டியலை 2022ஆன் ஆண்டின் வருமானம் வரை கணக்கிட்டு பட்டியலிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியில் முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட அவர் மிகப்பெரிய செல்வந்தர் எனும் தகுதியைப் பெற்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கிரிக்கெட் உலகின் கடவுள் என்று பார்க்கப்படும், இந்திய முன்னாள் வீரர் சச்சின் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் ரன் மெசின் விராட் கோலி மூன்றாவது இடத்திலும், தோனி 4-வது இடத்திலும், கங்குலி 5-வது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com